
அழுதுவிட ஆசைதான்
ஆயினும்
அர்த்தமற்ற
உலகில்
தள்ளி வைக்கும்
உறவில்
யானுமே வாழ்கையில்
கண்ணீரும் ஓர்
கரையாகுமா...?
கை கொடுக்க
மறு கையுண்டு........!
தோள் கொடுக்க
தோல்விகளின்
சாட்சிகளுண்டு....!
மனம் நிறைய
தெம்புண்டு.....!
எதனையும் ஏற்கும்
மனதோடு
வாழ்கையில்
இந்த முலாம்
பூசிய உறவுகளால்
என்னதான்
செய்ய முடியும்
என் வெற்றியை
தவிர்ப்பதன்றி..........!