திங்கள், 28 ஜூன், 2010

பதிலீடு........!


திருந்திய‌
திருத்திய‌
வசன‌
வியாக்கியானம்
தனை தன்னுள்
செதுக்கிய‌
அகராதி.....!
புரியாத மடலதன்
மென்மை
கொணர்ந்து
மடல் மயக்கிய
விதண்டாவாதம்.......!
மை தீண்டிய‌
விரல் இடுக்கை
புலனாகாத‌
தீண்டல் கொடுமைகள்
கருவி நனைந்த‌
இயல்பிருப்புக்கள்....!
மென்மைக்குள்
மேன்மை புலனாக
மறுத்திடும்
மர்மம் நீக்கும்
வல்லமை.......!
தீண்டாத பார்வையதில்
பதிந்திடும்
அர்த்தப் பதிவுகள்....!
சிதைந்த சில்மிஷ‌
சுவாசகங்கள்....!
மறுத்திடும்
புன்னகையிலும்
விலை பேச‌
முனையும்
ஓர் வர்க்கம்
என்றோ மடியும்
(அது) நமை
உணர்ந்து.......!
அன்றுண்டு
அதற்கும் ஓர்
பதிலீடு........!

தனக்குள்ளே........!



சில கணத்துளி
நேரமதில்
மனம் கொண்ட
வாஞ்சை
மறுத்திடவோ
புரிந்திடவோ
இயலா நிலையில்
யானுமே
(எனை)
ஆதங்கப்படுத்திப்
போவதன்
இயல்பிசை சுரம்
எதுவோ....?
வன்முறையோ......?
இல்லையேல்
வளைந்து செல்லும்
வழியிதுவோ......?
வேறுப்படுத்தியறியும்
வகையறியாது
யானும்
தவிப்பதன்
தகுசெயல் தான்
ஏனோ.......?

என் சகமாய்.....!


தொலைந்து போன‌
மன மாயைதனில்
அர்த்தமற்ற‌
அரிதாரங்கள்
எண்ணிப பார்த்திட‌
எல்லை மீறிய‌
படையெடுப்பாய்
உணர்வலைகள்
உணர்ந்து
போன பின்பும்
எதிலும்
எதையும்
மாற்ற
துணிகிறேன்........!
துவல்கிறேன்.......!

கலங்கமுற்ற நிலா


புரிந்து போன
மன‌
ஆழ் இடுக்கைக்குள்
புதைந்து போன‌
நியாயங்களைத்
தடவிய‌
பொழுதுகள்.....!
எடுத்தியம்பும் வழி
அடுக்கிய‌
பயண‌ங்கள் என
பாதையறிய‌
முனைகிறது வயது....!
எதுவுமே
வழி நெடுகிலும்
வகை சொல்லிடும்
புலனெதுவோ....?
தடுத்திடும் அர்த்த‌
இருப்பு
மாயையதன்
நிஜம் உணர‌
நித்தமொரு
சங்கடம்.........!
உணர மறுப்பின்
புலனதில்
மழைச் சாரல்.......!
வழி மீறிய‌
வலி சுமந்த‌
நேசக்கர‌மதில்
எண்னணற்ற‌
கயிறு திரிப்புகள்....!
கலந்தது எதுவுமா....?
என வினா
தடவும் விடைகள்தான்
ஏது.................?

வெள்ளி, 11 ஜூன், 2010

தனிமை


என் கற்பனைக்
கருவூலம்
கருத்தரிக்கும்
தருணம்....!

பொட்டு


நிரந்தரமில்லை
என
நிலை கொண்ட‌
பின்பும்
நிதமும்
நெற்றியிலே......!

என்றும்......!


உன்னிலே
யானும்
என்னிலே
நீயும்
உணர்வு பெற‌
மௌனமன்றி
வேறேதும்
யாசகம் யாதும்
வேண்டாது.....!

ஏன்...!


எனக்குள் உணரா
மௌன‌ங்கள் கூட‌
யான் உன்னிலே
உணர்வ‌தன்
கார‌ண‌ந்தான்
எதுவோ......?

உணர்ந்திடு....!


தாழ்ந்து போக‌
பணிந்து கொள்..
உந்தன்
தனித்துவத்திற்காக அல்ல..
ஒவ்வொரு
ஜீவனுள்ளும் உள்ள‌
தனித்துவத்தை
உணர்ந்திட........!

தேர்தல் காலம்...!


அரசியல் தேர்
அணிவகுத்துச்
செல்லும்
திருவிழாக்காலம்....!

ஆவ‌தென்ன‌....!


அழுதுவிட ஆசைதான்
ஆயினும்
அர்த்தமற்ற
உலகில்
தள்ளி வைக்கும்
உறவில்
யானுமே வாழ்கையில்
கண்ணீரும் ஓர்
கரையாகுமா...?
கை கொடுக்க‌
மறு கையுண்டு........!
தோள் கொடுக்க
தோல்விகளின்
சாட்சிக‌ளுண்டு....!
ம‌ன‌ம் நிறைய‌
தெம்புண்டு.....!
எத‌னையும் ஏற்கும்
ம‌ன‌தோடு
வாழ்கையில்
இந்த‌ முலாம்
பூசிய‌ உற‌வுக‌ளால்
என்ன‌தான்
செய்ய‌ முடியும்
என் வெற்றியை
த‌விர்ப்ப‌த‌ன்றி..........!

வியாழன், 10 ஜூன், 2010

மறுப்பின்றியே...........!

எதுவென்று
உணர மறுக்கவில்லை
எந்நிலையதன்
நிஜம் உணர
தயக்கமுமில்லை
இலட்சியேமே கரு
கொண்டு
களமமைத்திட‌
இயைந்தும் போகிறேன்....!
விதித்த பயன்
எதுவென்று
ஆனபோதிலும்
கணந்தோறும்
கனவு நிஜம்
பெறவே
எந்தன் யாசகம்
அதிலும்
ஓர் உயிர் சுவாசகம்.....!

இயல்கையில்.......................!


வாழ்க்கை ஒரு
வானவில்!
பார்த்தலின் பரவசம்
அதன்
உணர்தலில்
மரணித்துப்போகும்!
தூக்கம் தொலைத்த‌
கனவுகளில்
நிதம் ஒரு
நிதர்சன வேட்கை!
தினமும்
துன்பச்சாரல்களின்
துவம்சம்
துப்பறிந்து போகும்..........!