வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மின்னுவதெல்லாம் பொன்னாகும் என்ற பொறுமை வேண்டாம்


இயற்கையின் தாய்ப்பால் மழை
மேகமோதலில் வானன்னையின்
கருத்தரிப்பு இம்மழைத்துளி
மழை மண்சேரு முன்னும்
மண்ணை சார்ந்த பின்பும்
தன் வரவை ஒளிபரப்பும்
வித்தையே மின்னல்..!
தன் உயிர்ப்பை உறுதிப்படுத்தும்
மின்னஞ்சலே இடி
மழையை இருகரம் நீட்டி
ஆராததித்தாலும்
மின்னலை கசந்தும்
மறுக்கும் மனது
வந்தபின் வருந்துவதை விட‌
வருமுன் காப்பதே வேள்வி..!
முழுதாய் முடியாவிட்டாலும்
எம்மளவில் எளிதாய்
கடைப்பிடிப்போம்
பாதுகாப்பினை உறுதியாக்குவோம்
மின்னல் இசை மீட்கையில்
வயல்வெளி கடற்கறை படகு
தனித்த மரம் தனிப்பட்ட கட்டிடம்
குளம் குட்டை
நீர் நிறைந்த வாவி அருகில்
நிற்றலை தவிர்த்தல்
பாதுகாப்பினை வ‌லுப்ப‌டுத்த‌லாகும்
த‌லைமுடி க‌ழுத்துப‌குதிமுடி
செங்குத்தாக‌ சிலிர்ப்ப‌தை
உண‌ர்ந்திட்டால்
மின்ன‌ல் ராஜாவின் வ‌ர‌வேற்பு
இதுவென‌ மதித்து
பாதுகாப்பான‌ க‌ட்டிட‌ம்
நாட‌லாம்...!
இல்லையேல்
இருகால்களையும் நெருக்கி வைத்து
உட‌ம்பை குறுக்கி
சுருண்டு உட‌கார‌லாம்
மின்ன‌ல் வீணை மீட்கையில்
மொட்டை மாடிக‌ளை
முற்றாக‌ த‌விர்த்திட‌ல்
சால‌ச் சிற‌ந்தது...!
மின்க‌ம்பி த‌ண்ணீர்குழாய்
அருகில் நின்று
நியாய‌ப்ப‌டுத்த‌ல்
த‌வ‌றான‌தாகும்...!
த‌ரைய‌ன்றி ம‌ர‌
நாற்காலிக‌ளை
ஆச‌ன‌மாக்கிட‌ ஆவ‌ன‌ஞ்
செய்திட‌ல் அறிவுடைமை...!
மின் இணைப்பின்
துண்டிப்பினால்
மின் க‌ருவிக‌ளின்
உட‌ன்க‌ட்டை ஏற‌லை
ம‌றுத்திட‌லாம்...!
வ‌ந்த‌பின் வ‌ருந்தி
வாதாடுவ‌தை விட
வ‌ருமுன் எம்ப‌க்க‌
பாதுகாப்பினை வ‌லுப்ப‌டுத்த‌லாம்
ஏன்னெனில்
மின்னுவ‌தெல்லாம் என்றும்
பொன்னாவ‌தில்லை.....!!!










திங்கள், 21 மே, 2012

நானும் ஓர் கடனாளி


ஈரைந்து மாதங்கள் (ன்)னை
கருவில் சுமந்தவள்
(நான்)
கல்லறை செல்லுமட்டும்
இதயவறையில் சுமப்பவள்..!
கருவறையில் சுமந்ததற்காய்
கூடையை இன்று
தலையிலே சுமக்கிறாள்..!
நான் பாடசாலை போக
பள்ளம் மேடு ஏறுகிறாள்..!
நான் காலில் செருப்பணிய
நீயோ முள்ளிலே
காலை வைத்தாய்...!
நான் பட்டம் பெற
நீ மட்டம் எடுக்கிறாய்...!
நான் வாழ்வில்
கரையேர
நிரை பிடித்தாய்...!
குடை பிடித்து நான் செல்ல
குளிரிலே குளிர் காய்கிறாய்.!
போதுமம்மா....
நீ பட்ட துயருக்கு விலைதான்
என்னம்மா.....!!!
என்ன பந்தமிது....!
ஏனிந்த உறவு....!
உன் உள்ளம் இங்கு
வருமா யாருக்கும்...?
உனக்காக வாழ்வேன்
உன் இயந்திர கைகளுக்கு
ஓய்வளிப்பேன்..!
உறுதி கூறுகிறேன்
உன் வேதனையின் சாட்சியாய்................!!!!!

என் வானவில்


பிடித்த மொழி -மௌனம்

நிதம் யாசிப்பது -தனிமை

தினம் யோசிப்பது -தொலைந்த தேடல்கள்

இலயிப்பது -இயற்கையில்

வசப்படுவது -விதியில்

வாசம் செய்வது -இசையில்

கவலைப்படுவது -நேற்றைய வெற்றிகள்

எதிர்பார்ப்பது -நிதம் ஒரு தோல்வி

நிலை பெற நினைப்பது -எழுத்தில்

பரவசமடைவது -நட்சத்திர கண் சிமிட்டலுக்கு

பிடித்த தோல்வி -கை நழுவிய பட்டாம்பூச்சி

பிடித்த உணவு -மனதோடு பரிமாறப்பட்டது

பிடித்த மழை -கண்ணீர்

கவர்ந்த இடம் -தாயின் கருவறை

பிடித்த பரிமாறல் -மனம் விரிந்த புன்னகை

ஏங்குவது -பார்வைகளுக்கு

தொலைத்தது -சில உளறல்கள்

தேடுவது -சில மர்மங்கள்

வேண்டுவது -துன்பங்கள்

கொள்ளை போவது -மழலை இதழ் விரிப்பில்

கனவு காண்பது -இயலாதவை பற்றி

துவண்டு போவது -சில(ர்) வார்த்தைகளுக்கு

சுவாசிக்க யாசிப்பது -சுதந்திரம்

பிடித்த நிறம் -பசுமை

சந்தோஷப்படுவது -அனுபவங்களை எண்ணி

சங்கடப்படுவது -சில பார்வைகளுக்கு

கர்வம் கொள்வது -நட்பை எண்ணி

பிடித்த நூல் -அனுபவம்

ஆசைப்படுவது -மழைத்தீண்டல்களுக்கு

கவர்வது -ஆத்மார்த்த அன்புக்கு

திருப்தி கொள்வது -சிந்திப்பில்

கொடுக்க விரும்பாதது -சொந்தங்களை

கேட்க விரும்பாதது -மனங்கசங்கிய மன்னிப்பு

சிறந்த வாசகம் -எதுவும் உன்னிலே

ஆண்டவனிடம் யாசிப்பது -நிரந்தர மரணம்

வரவேற்பது -சங்கடங்கள்

என்னிலே எனை ஆள்வது -மரணந்தாண்டிய மௌனம்

தவமின்றி கிடைத்தது -கருவறை பந்தம்

இலட்சியம் -இதயங்களில் வாழ்வது

கால் நனைப்பு

ஆ...ஆ... மெல்ல முணங்களுடன் இறுகி மூடிக் கிடந்த இமைகளை திறக்க முயல்கிறேன்.  விண் விண் என்ற தெறிப்பினை உணர்ந்தபடி யாரோ என் இமைகளை மூடி தைத்து விட்டது போன்ற உணர்வுடன் மெல்ல மடல்களை விரிக்கிறேன்.

 சில கண சுய சாதனைக்கு பின் நான் தற்போது ஒர் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.

கட்டிலில் ஏதோ ஓர் கண்காடசி பொம்மை போல் கிடத்தப்பட்டுள்ளேன்.

என்னைச் சூழ அம்மா அப்பா. சுரேஸ் அண்ணா சுப்பு குட்டி எல்லோரும் கண் கலங்கிய படி நிற்கின்றனர்.

கைகளை இழுக்க முயன்று வலியுடன் எனக்கு சேலைன் ஏற்றப்பட்டுள்ளதை உணர முடிகிறது என்னால்.

அம்மா என்னருகில் கண்களை கசக்கியபடி வந்து கைகளை தடவிக்கொடுக்கிறாள். அப்பா என் தலைகோதி 'என்னம்மா' எனபது போல ஆறுதல் படுத்த முயல்கிறார்.

 தீடிரென ஹரி... ஹரி.... ஒனக்கு என்னாச்சு...??? யாரோ ஓர் ஆண் குர‌ல் என்னை தொட்டு எழுப்ப முயல்வதாக உணர்கிறேன்.

நான் ப‌ய‌ந்து "அப்..பா... அப்பா.... யாரப்பா...எனக்கு பயமா இ...ருக்.குப்..பா அப்பா.." என அப்பாவை அணைத்து கொண்டேன்.

"இல்லம்மா......இல்ல நீ பயப்படாத நீ தூங்கு அப்பா இருக்குறே இல்ல.நா பாத்துகுறேன்" என்று அப்பா சொல்லிகொண்டிருக்கும் போதே

 "என்ன ஹரிணி... என்னய ஒனக்கு தெரியலயா…..ஹரிணிம்மா என்னாச்சு ஒனக்கு...ஹரிம்மா.... “மீண்டும் அதே குரல்

சுரேஸ் அண்ணா குரலுக்கு உரிமையாளரை "வாங்க சார் நீங்க‌...அவங்கள டிஸ்டர்ப் பண்னாம..." என்று வெளியே அழைத்து செல்கிறார்

. "ஹரிணி என்ற ஒலி இப்போது தூரமாய் ஒலிக்கிறது.நான் மெதுவாக என் கண் மடல்களை மூடி அப்பா மடியில் தலைவைத்து கண்ணயர்கிறேன் பழைய நினைவுகளாய் நேற்றைய இர‌வை மீட்டிய படி....

 "அப்பா அவரு நல்லா படிச்சவரு..உங்களுக்கு உங்க மக மேல நம்பிக்கை இருந்தா சரின்னு சொல்லுங்கப்பா...." என்று நான் என்னவன் நிமலேஷ்காக அப்பாவிடம் வாதாட அப்பாவோ தான் சாக போவதாக சொல்ல அம்மா எனை அடித்தபடி அழுது கீழே விழ திரைப்பட காட்சி போலானது.

 நான் யாருக்காகவும் முடிவெடுக்க முடியாது போக என்னதான் தலைமைத்துவம் பற்றிய ஹென்றி மின்ஸ்பெர்க்கின் Disturbance Handler கொள்கையை ஆதரித்தாலும் தூக்க மாத்திரைகளை அள்ளி வாய்க்குள் போட்டேன்....

 இன்று…………………..

நிமலேஷ் உன்னய என்னால மறக்க முடியாது. இருந்தும் 22 வருஷம் கண் போல் காத்து வந்த பெற்றோர் என்று வாறப்ப உன்னய நா விட்டுக் கொடுத்துட்டேன் நிமலேஷ்....

பிரிவினால என் காதல் இன்னும் வலுவடைய கூடாது. அதால தான் இரவு பாதியும் தூங்காத உன் கண்கள பார்த்த பிறகும் நீ யார்னு கேட்டேன்..

நிமலேஷ் நம் காதல் உண்மை. உன்னய நா மறக்க முடியாம தவிக்கிறேன்.

இருந்தாலும் என்னய இந்த பாவிய நீ மறக்க முயற்ச்சிபாய்கிற நம்பிக்கையில தான் இந்த முடிவு...

மன்னிச்சிடாத நிமலேஷ் என்னய. இந்த ஹரிய மறந்துடு....!!!!

கண்களில் வழிகிற கண்ணீர் சொட்டுக்களை அப்பாவின் அன்புக் கரங்கள் துடைக்கின்றன.

வியாழன், 30 ஜூன், 2011

ரணவலிகள்


தின்று தின்று
சுவாசித்த பின்பும்
எதைத்தான் யாசிக்கின்றன‌
எஞ்சியிருக்குமென்று.....!

இயலுமா....?


ஏறிப் போகும் விலைவாசியினால் மலையக மக்கள் சொல்லொணா துன்பங்களை எதிர் நோக்குகின்றனர்.சாக்கு போக்குகளுக்கு மத்தியில் சம்பள விவகாரம் முடிவுற்றாலும் நாள் தோறும் அதிகரித்துச் செல்கின்ற விலையேற்றத்தால் எம்மக்கள் பல்வேறு பொருளாதார சுமைகளை ஏற்க வேண்டியுள்ளது.அடிப்படை வசதிகளுக்கே அல்லலுறும் இம்மக்கள் தற்போது நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதில் பெரும் இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.


தம்மைப் போலவே தம் பிள்ளைகளும் கஷ்டப்படக் கூடாதென மலையக பெற்றோர்கள் முனைகின்றனர்.ஆதலால் தான் தாம் பெறாத கல்வினை தம் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதில் முன் நிற்கின்றனர்.


இருப்பினும் நிதமும் ஏறிப் போகின்ற விலையேற்றத்தால் மலையக பெற்றோர்கள் மேற்கொள்கின்ற தம் பிள்ளைகளுக்கான கல்வி முயற்சி முடவன் கொம்புத்தேனுக்கு அவா கொண்டது போலாகி விடாதிருத்தலே சாலச் சிறந்தது.

ஞாயிறு, 13 மார்ச், 2011

பேனா


தன்னளவில்
எனை
முழுவதுமாய்
உணர்ந்து கொண்ட‌
(ஒரேயொரு)
உயிர்த்துளி நண்பன்.....!

இறையாசி....!


என்று என்
இதழ்கள்
மொட்டவிழ
தயங்குகிறதோ
அக்கணம் யாவும்
நீயே என்வசம்....!

வெள்ளி, 3 டிசம்பர், 2010

நட்பாலே......!


விண்ணிலே வான‌வில்லையே
வ‌ளைத்து போட்ட‌தாய்
ஓர் உண‌ர்வு!
எண்ண‌லூட்ட‌லில்
ஏகாந்த‌மே கைவ‌சம்...!
உணர்வுப் ப‌ரிமாற‌லில்
ஓர் உத்த‌ம‌
நட்புக்க‌ரம்...!
இறுகிப்போன‌
ம‌ன‌ உண‌ர்வுகள்
த‌ள‌ர்ந்து போயின..!
நீட்டிய‌ க‌ர‌ம்
நீட்சிய‌டைய‌
உய்வ‌டைய‌
வ‌ழி கோலியது..!
யாவுமே‌
என்னுள் ம‌ட்டுமா..?
என‌
எண்ண‌ இருப்பில்
எழுச்சியாய்
ஓர் கேள்வி...!
ம‌றுமுனை ப‌தில்
ந‌ட்புக்க‌ர‌த்தை
த‌ன்
சொந்த‌க்க‌ரமாக்க
முனையும்
யாச‌க‌ம் உணர்த்திற்று....
தன்னுள்ளே எனை
ஆள்வ‌த‌ன் யாச‌க‌ம்
சொல்லிற்று....!
மௌனங் கூட‌
இந்நிலைதனில்
ம‌ர‌ணத்தை எட்டிப்
பார்க்க‌லாயிற்று...!
புரியாத‌ ப‌ய‌ண‌மா?
புரியாத‌ எதிர் துருவ‌மா...?
எதுவும் புரிய‌
மறுக்கும்
உன்னிட‌ம்
எதையும்
ப‌றைசாற்ற‌ என்னிட‌ம்
வ‌லுவில்லை!
புரிந்திடு ந‌ண்ப‌னே
ந‌ட்புக்கு ம‌ட்டுமே
என்றும் நீளும்
எ(ந்த‌)ன் க‌ர‌ம்....!

இயல்கையில்......!


வாழ்க்கை ‍‍ஒரு
வானவில்
பார்த்தலின் பரவசம்
அதன்
உணர்தலில்
ம‌ர‌ணித்துப்போகும்
தூக்க‌ம் தொலைத்த‌
க‌னவுக‌ளில்
நிதர்சன வேட்கை!
தினமும்
துன்பச் சாரல்களின்
துவம்சம்
துப்பறிந்து போகும்......!

சனி, 18 செப்டம்பர், 2010

என்றுமே......!


யான் கொண்ட‌
கண்ணீர் கரைய‌
இதயமே
கரை கொடு
விடிவோடு
பொழுதுகள் மட்டுமல்ல‌
என் வாழ்வும்
விடிய........!

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

அறிகிலேன்....!


புரியா
மாயங்கள்
அதில்
புரிந்திடா
புன்னகைச்
சிதறல்கள்
வழி திறந்திட‌
புது வழி
எதுவோ.....!

நினைவுச் சுவாலை....!


கனவுகள் கட்டித்
தந்த‌
வயது இரண்டாய்
கூடிற்று
தன்னிலை தனிலே.......!
எமக்கு
சவால் விடுத்த‌
சந்தர்ப்பம்
நழுவிய‌
சங்கடங்களென‌
நகர்ந்த பொழுதுகள்
அவை.....!
கண்ணீரும் க‌ரை
தேட‌ முனைந்த‌
நிலையது.....!
த‌னிமைக்குள் சுக‌ம்
சேர்ந்த‌
ப‌க்குவ‌ ச‌ம‌ர‌ச‌மிது....!
புரிந்து போன‌
புரியா(த‌)
நிலையிய‌ல்
தேட‌ல்க‌ள்.....!
சிதைந்து போன‌
சிங்கார‌
எதிர்பார்ப்புக‌ள்.....!
புதிதாய் உண‌ர் சூழ்
மாற்ற‌ம் நிக‌ழ்
ம‌ர்ம‌ச்
சாக‌ர‌ங்க‌ள்
அர‌ங்கேறிய‌
எல்லையிது....!
எதற்கும் எத‌ற்குள்ளும்
த‌னித்துவ‌ம்
உணர் த‌ர்ம்
ப‌வித்ர‌ நிலையின்
ப‌ரீட்சை
நிலைய‌து.....!
முத‌ல் த‌ந்த
இர‌ண்டின்
அனுப‌ சுவாச‌த்
தீண்ட‌லின்
துவ‌ம்ச‌மான‌ பொழுதுக‌ள்....!
எண்ணிப் பார்த்திட‌
புன்ன‌கைக்ள்
க‌ர‌ம் நீட்டும்
ந‌ட்பு சிக‌ர‌மிது..!
புதிதாய் வாய்த்த‌
ப‌ள்ளியாய்
அமைந்த‌
ப‌ழைய‌ நிலை
சுவாச‌க நினைவ‌லைக‌ள்
என நித‌ம்
க‌ண் கொண்ட‌
சுவ‌டுக‌ளாய்.......!

திங்கள், 28 ஜூன், 2010

பதிலீடு........!


திருந்திய‌
திருத்திய‌
வசன‌
வியாக்கியானம்
தனை தன்னுள்
செதுக்கிய‌
அகராதி.....!
புரியாத மடலதன்
மென்மை
கொணர்ந்து
மடல் மயக்கிய
விதண்டாவாதம்.......!
மை தீண்டிய‌
விரல் இடுக்கை
புலனாகாத‌
தீண்டல் கொடுமைகள்
கருவி நனைந்த‌
இயல்பிருப்புக்கள்....!
மென்மைக்குள்
மேன்மை புலனாக
மறுத்திடும்
மர்மம் நீக்கும்
வல்லமை.......!
தீண்டாத பார்வையதில்
பதிந்திடும்
அர்த்தப் பதிவுகள்....!
சிதைந்த சில்மிஷ‌
சுவாசகங்கள்....!
மறுத்திடும்
புன்னகையிலும்
விலை பேச‌
முனையும்
ஓர் வர்க்கம்
என்றோ மடியும்
(அது) நமை
உணர்ந்து.......!
அன்றுண்டு
அதற்கும் ஓர்
பதிலீடு........!

தனக்குள்ளே........!



சில கணத்துளி
நேரமதில்
மனம் கொண்ட
வாஞ்சை
மறுத்திடவோ
புரிந்திடவோ
இயலா நிலையில்
யானுமே
(எனை)
ஆதங்கப்படுத்திப்
போவதன்
இயல்பிசை சுரம்
எதுவோ....?
வன்முறையோ......?
இல்லையேல்
வளைந்து செல்லும்
வழியிதுவோ......?
வேறுப்படுத்தியறியும்
வகையறியாது
யானும்
தவிப்பதன்
தகுசெயல் தான்
ஏனோ.......?

என் சகமாய்.....!


தொலைந்து போன‌
மன மாயைதனில்
அர்த்தமற்ற‌
அரிதாரங்கள்
எண்ணிப பார்த்திட‌
எல்லை மீறிய‌
படையெடுப்பாய்
உணர்வலைகள்
உணர்ந்து
போன பின்பும்
எதிலும்
எதையும்
மாற்ற
துணிகிறேன்........!
துவல்கிறேன்.......!

கலங்கமுற்ற நிலா


புரிந்து போன
மன‌
ஆழ் இடுக்கைக்குள்
புதைந்து போன‌
நியாயங்களைத்
தடவிய‌
பொழுதுகள்.....!
எடுத்தியம்பும் வழி
அடுக்கிய‌
பயண‌ங்கள் என
பாதையறிய‌
முனைகிறது வயது....!
எதுவுமே
வழி நெடுகிலும்
வகை சொல்லிடும்
புலனெதுவோ....?
தடுத்திடும் அர்த்த‌
இருப்பு
மாயையதன்
நிஜம் உணர‌
நித்தமொரு
சங்கடம்.........!
உணர மறுப்பின்
புலனதில்
மழைச் சாரல்.......!
வழி மீறிய‌
வலி சுமந்த‌
நேசக்கர‌மதில்
எண்னணற்ற‌
கயிறு திரிப்புகள்....!
கலந்தது எதுவுமா....?
என வினா
தடவும் விடைகள்தான்
ஏது.................?

வெள்ளி, 11 ஜூன், 2010

தனிமை


என் கற்பனைக்
கருவூலம்
கருத்தரிக்கும்
தருணம்....!

பொட்டு


நிரந்தரமில்லை
என
நிலை கொண்ட‌
பின்பும்
நிதமும்
நெற்றியிலே......!

என்றும்......!


உன்னிலே
யானும்
என்னிலே
நீயும்
உணர்வு பெற‌
மௌனமன்றி
வேறேதும்
யாசகம் யாதும்
வேண்டாது.....!