திங்கள், 21 மே, 2012

என் வானவில்


பிடித்த மொழி -மௌனம்

நிதம் யாசிப்பது -தனிமை

தினம் யோசிப்பது -தொலைந்த தேடல்கள்

இலயிப்பது -இயற்கையில்

வசப்படுவது -விதியில்

வாசம் செய்வது -இசையில்

கவலைப்படுவது -நேற்றைய வெற்றிகள்

எதிர்பார்ப்பது -நிதம் ஒரு தோல்வி

நிலை பெற நினைப்பது -எழுத்தில்

பரவசமடைவது -நட்சத்திர கண் சிமிட்டலுக்கு

பிடித்த தோல்வி -கை நழுவிய பட்டாம்பூச்சி

பிடித்த உணவு -மனதோடு பரிமாறப்பட்டது

பிடித்த மழை -கண்ணீர்

கவர்ந்த இடம் -தாயின் கருவறை

பிடித்த பரிமாறல் -மனம் விரிந்த புன்னகை

ஏங்குவது -பார்வைகளுக்கு

தொலைத்தது -சில உளறல்கள்

தேடுவது -சில மர்மங்கள்

வேண்டுவது -துன்பங்கள்

கொள்ளை போவது -மழலை இதழ் விரிப்பில்

கனவு காண்பது -இயலாதவை பற்றி

துவண்டு போவது -சில(ர்) வார்த்தைகளுக்கு

சுவாசிக்க யாசிப்பது -சுதந்திரம்

பிடித்த நிறம் -பசுமை

சந்தோஷப்படுவது -அனுபவங்களை எண்ணி

சங்கடப்படுவது -சில பார்வைகளுக்கு

கர்வம் கொள்வது -நட்பை எண்ணி

பிடித்த நூல் -அனுபவம்

ஆசைப்படுவது -மழைத்தீண்டல்களுக்கு

கவர்வது -ஆத்மார்த்த அன்புக்கு

திருப்தி கொள்வது -சிந்திப்பில்

கொடுக்க விரும்பாதது -சொந்தங்களை

கேட்க விரும்பாதது -மனங்கசங்கிய மன்னிப்பு

சிறந்த வாசகம் -எதுவும் உன்னிலே

ஆண்டவனிடம் யாசிப்பது -நிரந்தர மரணம்

வரவேற்பது -சங்கடங்கள்

என்னிலே எனை ஆள்வது -மரணந்தாண்டிய மௌனம்

தவமின்றி கிடைத்தது -கருவறை பந்தம்

இலட்சியம் -இதயங்களில் வாழ்வது