ஈரைந்து மாதங்கள் எ(ன்)னை
கருவில் சுமந்தவள்
(நான்)
கல்லறை செல்லுமட்டும்
இதயவறையில் சுமப்பவள்..!
கருவறையில் சுமந்ததற்காய்
கூடையை இன்று
தலையிலே சுமக்கிறாள்..!
நான் பாடசாலை போக
பள்ளம் மேடு ஏறுகிறாள்..!
நான் காலில் செருப்பணிய
நீயோ முள்ளிலே
காலை வைத்தாய்...!
நான் பட்டம் பெற
நீ மட்டம் எடுக்கிறாய்...!
நான் வாழ்வில்
கரையேர
நிரை பிடித்தாய்...!
குடை பிடித்து நான் செல்ல
குளிரிலே குளிர் காய்கிறாய்.!
போதுமம்மா....
நீ பட்ட துயருக்கு விலைதான்
என்னம்மா.....!!!
என்ன பந்தமிது....!
ஏனிந்த உறவு....!
உன் உள்ளம் இங்கு
வருமா யாருக்கும்...?
உனக்காக வாழ்வேன்
உன் இயந்திர கைகளுக்கு
ஓய்வளிப்பேன்..!
உறுதி கூறுகிறேன்
உன் வேதனையின் சாட்சியாய்................!!!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக