ஞாயிறு, 20 ஜூலை, 2014

மழைக்குருவி


பார்வைகளின் பரிமாறலில்
மொழிபெயர்த்தோம்..மௌனங்களை
தவிர்த்திட முனையும்
சங்கடங்களை சமாளிக்க‌
விரல்கள் வேதம் படித்தன...!
அவை கூந்தல் கானகத்தின்
கும்மிருட்டிலும்
குறுநாவல் வாசித்தன...!
சுவாசங்களை தீண்டி
அங்கீகாரங்களை
அர்ப்பணித்து ஆயுள்
வளர்த்தோம்....!
மூச்சுகாற்றின்
சுவாச கானம் கேட்க‌
மார்பு மெத்தைக்குள்
மண்டியிட்டு கிடக்கிறேன்...!
அலைகோதிய வேளை

முகப்பருக்களின்
நாணங்க|ளின் நலம் விசாரித்து
அதன் சிவப்பழகை
ரசிக்கிறாய்...!
வியர்த்துக் கிடந்த விரல்களுக்கு
முத்த ஒத்தடம் தந்து
சபை கலைக்கிறாய்...!
இமை துடிப்பின்
இடைவெளிக்குள்
கனவுகளை கைகோர்த்து
கண்ணீரை களவாடுகிறாய்....!
மொத்தமாய் உரிமை சாடிய‌
ஆடைக்காய்
நீதி கோருகிறாய்...!
மறுக்க இயைந்தும்
அங்கீகரித்து கையொப்பமிடுகிறேன்
உன் செல்லதீண்டலகளை....!
ஆதலால்
விட்டு விட்டு  தூவும்
கண்களை திறந்து
காதலை கைகோர்த்து கொள்கிறேன்.....!