
ஏறிப் போகும் விலைவாசியினால் மலையக மக்கள் சொல்லொணா துன்பங்களை எதிர் நோக்குகின்றனர்.சாக்கு போக்குகளுக்கு மத்தியில் சம்பள விவகாரம் முடிவுற்றாலும் நாள் தோறும் அதிகரித்துச் செல்கின்ற விலையேற்றத்தால் எம்மக்கள் பல்வேறு பொருளாதார சுமைகளை ஏற்க வேண்டியுள்ளது.அடிப்படை வசதிகளுக்கே அல்லலுறும் இம்மக்கள் தற்போது நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதில் பெரும் இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
தம்மைப் போலவே தம் பிள்ளைகளும் கஷ்டப்படக் கூடாதென மலையக பெற்றோர்கள் முனைகின்றனர்.ஆதலால் தான் தாம் பெறாத கல்வினை தம் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதில் முன் நிற்கின்றனர்.
இருப்பினும் நிதமும் ஏறிப் போகின்ற விலையேற்றத்தால் மலையக பெற்றோர்கள் மேற்கொள்கின்ற தம் பிள்ளைகளுக்கான கல்வி முயற்சி முடவன் கொம்புத்தேனுக்கு அவா கொண்டது போலாகி விடாதிருத்தலே சாலச் சிறந்தது.