
கனவுகள் கட்டித்
தந்த
வயது இரண்டாய்
கூடிற்று
தன்னிலை தனிலே.......!
எமக்கு
சவால் விடுத்த
சந்தர்ப்பம்
நழுவிய
சங்கடங்களென
நகர்ந்த பொழுதுகள்
அவை.....!
கண்ணீரும் கரை
தேட முனைந்த
நிலையது.....!
தனிமைக்குள் சுகம்
சேர்ந்த
பக்குவ சமரசமிது....!
புரிந்து போன
புரியா(த)
நிலையியல்
தேடல்கள்.....!
சிதைந்து போன
சிங்கார
எதிர்பார்ப்புகள்.....!
புதிதாய் உணர் சூழ்
மாற்றம் நிகழ்
மர்மச்
சாகரங்கள்
அரங்கேறிய
எல்லையிது....!
எதற்கும் எதற்குள்ளும்
தனித்துவம்
உணர் தர்ம்
பவித்ர நிலையின்
பரீட்சை
நிலையது.....!
முதல் தந்த
இரண்டின்
அனுப சுவாசத்
தீண்டலின்
துவம்சமான பொழுதுகள்....!
எண்ணிப் பார்த்திட
புன்னகைக்ள்
கரம் நீட்டும்
நட்பு சிகரமிது..!
புதிதாய் வாய்த்த
பள்ளியாய்
அமைந்த
பழைய நிலை
சுவாசக நினைவலைகள்
என நிதம்
கண் கொண்ட
சுவடுகளாய்.......!